image ddc6cedb71
உலகம்செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை நிராகரித்தது ரஸ்யா!!

Share

ரஸ்யாவில் இருந்து வரும் எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலர்கள் ஆக ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து ஜி7-ல் சேர்க்கப்பட்டுள்ள பணக்கார நாடுகள் இந்த விலை வரம்பை நிர்ணயித்துள்ளன.

மேலும், ரஸ்யாவிலிருந்து உலகிற்கு வரும் எண்ணெய் தடையின்றி தொடர்ந்து வழங்குவதே இதன் நோக்கமாகும். ரஸ்ய எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலர் என்ற உச்சவரம்பை நிர்ணயிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

அதேபோல, ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவை ஆஸ்திரேலியா மற்றும் ஜி-7 நாடுகளும் ஆதரித்துள்ளன. உக்ரைன் போர் தொடங்கிய பின், ஐரோப்பிய ஒன்றியம் ஜி-7 நாடுகளும் ரஸ்யாவிலிருந்து இறக்குமதியாகும் எண்ணெய்க்கு தடை விதித்துள்ளன.

இதற்கிடையே, தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த விலை வரம்பு ரஸ்யா பெறும் வருவாயைக் கட்டுப்படுத்த ஒரு முக்கியமான கருவி ஆகும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் எண்ணெய் விநியோகம் சீராக கிடைத்திட வழி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் விலை வரம்பை ரஸ்யா ஏற்க மறுத்து இந்த முடிவை நிராகரித்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...