1795598 imrankhan
உலகம்செய்திகள்

இந்தியாவுடன் நல்லுறவுக்கு வாய்ப்பில்லை- இம்ரான்கான்

Share

பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் வரை இந்தியாவுடன் நல்லுறவுக்கு சாத்தியமில்லை என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் வர்த்தகத்தை நிறுவினால் அடையக்கூடிய பொருளாதார நன்மைகள் மிகப் பெரியதாக இருக்கும். ஆனால் காஷ்மீர் பிரச்சினை முக்கிய தடையாக இருந்தது. இப் பிரச்சினையை தீர்ப்பது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் பா.ஜனதா அரசாங்கம் மிகவும் கடுமையானது. அவர்கள் பிரச்சினைகளில் தேசியவாத நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். பாகிஸ்தான்-இந்தியா இடையே நல்லுறவை விரும்புகிறேன். ஆனால் இந்தியாவில் பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் போது அது நடக்க வாய்ப்பில்லை. தேசியவாத உணர்வுகளை தூண்டிவிடுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வாய்ப்பில்லை என்ற நிலை ஏமாற்றம் அளிக்கிறது.

எங்களை பொறுத்த வரை காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண பாதையை அவர்கள் (இந்தியா) வைத்திருக்க வேண்டும் என்பதுதான். 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது இந்தியாவுடனான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது.

நான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆப்கானிஸ்தான், ஈரான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பாகிஸ்தானின் அனைத்து அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி செய்வேன்.

உண்மையில் எங்களுக்கு அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு தேவை. மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க சிறந்த வழி அனைவருடனும் நல்லுறவை வைத்து வர்த்தகம் செய்ய வேண்டும். இதன் மூலம் தான் மக்களுக்கு உதவ முடியும். – என்று தெரிவித்துள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...