உலகளவில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என அமெரிக்காவின் கொரோனா தடுப்புப் பிரிவு அதிகாரி ஆஷிஷ் ஜா தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது. தடுப்பூசி உற்பத்தி செய்யும் அளவு அபரிமிதமாக இருப்பதால், தடுப்பூசிகளின் முக்கிய ஏற்றுமதியாளராக உள்ளது.
இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான குவாட் (QUAD) கூட்டாண்மை, அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முக்கியமானது. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்கும் – என்றார்.
#world
Leave a comment