உலகம்
சீன உலோக சுரங்கங்களில் 40,000 குழந்தைத் தொழிலாளர்கள்! – விசாரணையில் அம்பலம்


கொங்கோவின் கோபல்ட் உலோக சுரங்கங்களில் சீனா 40,000 குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்தி இருப்பது மனித உரிமை மீறல்கள் தொடர்பான கொங்கிரஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மின் சாதனங்கள் மற்றும் மின்சார கார்களை இயக்கப் பயன்படுத்தும் கோபல்ட் உலோக சுரங்கத்தில் சீனா அபாயகரமான வேலைச் சூழலுக்கு சிறுவர்களை கட்டாயப்படுத்துவதாக கதொலிக் செய்தி நிறுவனத்தில் செல்டா கால்ட்வெல் எழுதியுள்ளார்.
கொங்கோ சுரங்கத் தொழில்துறையில் சீனா பிரதான வெளிநாட்டு சக்தியாக இயங்கி வருகிறது. 2019இன் படி சீனா அதன் 83 வீதமான கோபல்ட் உலோம் மற்றும் 9 வீதமான சுத்திகரிக்கப்பட்ட செம்பு மற்றும் செப்புக் கலவையை கொங்கோவில் இருந்து இறக்குமதி செய்கிறது.