இந்தியா
உலக பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானிக்கு 6 ஆவது இடம்!


உலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி 6 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டே கவுதம் அதானி முதல் இடத்தை பிடித்தார். ரிலையன்ஸ் குழும நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவரான முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி கவுதம் அதானி முதலிடத்தை பிடித்தார்.
இந்த நிலையில் தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில், அமெரிக்காவின் சாப்ட்வேர் சக்கரவர்த்தி லேரி எலிசனை பின்னுக்கு தள்ளி 6 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
கவுதம் அதானியின் சொத்து மதிப்பு நேற்றையதினத்தில் மட்டும் ரூ.68 ஆயிரம் கோடி உயர்ந்துள்ளது. நேற்றைய தின முடிவில் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.9.27 லட்சம் கோடியாகும். இது முகேஷ்அம்பானியின் சொத்தைவிட ரூ.1.67 லட்சம் கோடி அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.