மியான்மர் இராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மியான்மரில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சிக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுக்கக்கோரியும் சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்குமாறும் வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் போராடி வருகின்றனர்.
அதேவேளை இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு பல்வேறு கிளர்ச்சியாளர் குழுக்களும் தோன்றியுள்ளன. இந்தக் குழுக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் இடம்பெறுகின்றன.
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை ஆயிரத்து 58 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே திடீரென நேற்று துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.
இந்த மோதலில் 20 பேர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment