ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி காலமானார்!
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
63 வயதுடைய அவர் கடந்த இரு வாரங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் சென்னை, பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் ஓ.பாலமுருகன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கடந்த மே மாதம் 14 ஆம் திகதி காலமானார். அதையடுத்து மனைவியும் உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Leave a comment