தலிபன்கள் கையில் அமெரிக்க ஹெலிகொப்டர் – சடலத்துடன் பறந்து அதகளம்!!
ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் அமெரிக்க பிளாக் ஹொக் ஹெலிகொப்டரில் சடலத்தைத் தொங்கவிட்டபடி தலிபன்கள் பறந்த காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் உலாவி வருகிறது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்கள் முழுமையாக வெளியேறிவிட்ட நிலையில் அந்நாடு முழுமையாக தலிபன்கள் கட்டுக்குள் வந்துவிட்டது.
இது குறித்து தலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத், இஸ்லாமிய ஆப்கான் அமீரகம் இனி சுதந்திரமான நாடு. இதில் நாம் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம். அமெரிக்கா தோற்றுவிட்டது. இந்நிலையில், எங்கள் நாட்டின் சார்பாக நாங்கள் உலகின் பிற நாடுகளுடன் நல்லுறவை பேண விரும்புகிறோம். ஆப்கான் மக்களின் சுதந்திரம் போற்றப்படும். இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு ஆட்சி நடைபெறும். நமது வெற்றி அந்நியப் படைகளுக்கு ஒரு பாடம். தலிபன் படைகள் கண்ணியமாக நடந்துகொள்ளும் என்று தெரிவித்தார்.
விமான நிலையத்தில் தலிபன்கள் தமது வெற்றியை துப்பாக்கி குண்டுகளை முழங்கி ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
இந்நிலையில், ஆப்கானின் கந்தஹார் நகரில் அமெரிக்க பிளாக் ஹொக் ஹெலிகொப்டரில் சடலத்தைத் தொங்கவிட்டபடி தலிபன்கள் பறந்த காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ தலிபன்களின் அதிகாரபூர்வ ஆங்கில டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஹெலிகொப்டரில் ஒரு சடலம் தொங்குவது தெளிவாகத் தெரியும் நிலையில் அதுகுறித்து ஒரு சிறிய வார்த்தை கூட தலிபன்கள் கூறவில்லை. அந்த சடலம் அமெரிக்க வீரருடையதா இல்லை பொதுமக்களுடையதா என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
இருப்பினும் அதனைப் பகிர்ந்துவரும் பலரும், இந்த வீடியோவில் இருப்பது உண்மையிலேயே ஒரு மனிதர் தானா இல்லை ஏதும் பொம்மையா என்று பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
Leave a comment