சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்யாவின் 20 ட்ரோன்கள்: இரவோடு இரவாக உக்ரைன் பதிலடி
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு களமிறக்கப்பட்ட 20 ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதலில், ரஷ்ய அதிகமான வான் தாக்குதலை உக்ரைனிய குடியிருப்பு பகுதிகள் மீது நடத்தி வருகிறது.
இவற்றில் பெரும்பாலானவற்றை உக்ரைன் வான் தடுப்பு ஆயுதங்கள் மூலம் தடுத்து நிறுத்தினாலும், அவற்றில் சில ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைனிய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தி பலத்த சேதங்களை ஏற்படுத்தி விடுகின்றன.
அவ்வாறு சமீபத்தில் உக்ரைன் மீது ரஷ்யா ஈரானிய ட்ரோன்கள் மூலம் நடத்திய பயங்கர வான் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 4 பேர் படுகாயமடைந்தனர் என கீவ் ராணுவ நிர்வாகம் தகவல் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை உக்ரைனிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா ஏவிய 20 ஈரானிய ட்ரோன்களையும் உக்ரைன் விமானப்படை இரவோடு இரவாக சுட்டு வீழ்த்தியுள்ளது.
இவற்றுடன் இரண்டு கலிபர் கப்பல் ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிய தலைநகரான கீவ் பிராந்தியம் நோக்கி முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் பெரும்பாலான ட்ரோன்கள் ஈரானில் தயாரிக்கப்பட்ட dShahed ஆகும் என உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.
Leave a comment