பாகிஸ்தானிலுள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் சிறிய கிராமமான தோர்ஹர் கிராமத்தில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.
அங்குள்ள 3 வீடுகளை மின்னல் தாக்கியுள்ளது. இந்த மின்னல் தாக்கத்தால் அந்த வீடுகளில் இருந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 14 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து தோர்ஹர் கிராமத்தில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதையுண்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment