இனி இவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய்! வெளியான செய்தி
உலகம்செய்திகள்

இனி இவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய்! வெளியான செய்தி

Share

இனி இவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய்! வெளியான செய்தி

முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் பெறும் குடும்ப பெண்களும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை 1 கோடியே 54 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், விண்ணப்ப முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் முதியோர் ஓய்வூதியத்தால் அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெறுவது தடைபடக்கூடாது என தலைமைச்செயலகத்தில் நடந்த ஆய்வுக்கூடத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய ஓய்வூதிய திட்டம், போன்ற திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்கள், உரிமைத் தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

வரும் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இந்த முகாம்களில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் விண்ணப்பம் பதிவு செய்ய தவறியவர்களும் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...