TASS 47537141
உலகம்

வெடித்துச் சிதறிய பஸ்! – இருவர் உயிரிழப்பு!! – ரஷ்யாவில் அதிர்ச்சிச் சம்பவம்

Share

வெடித்துச் சிதறிய பஸ்! – இருவர் உயிரிழப்பு!! – ரஷ்யாவில் அதிர்ச்சிச் சம்பவம்

ரஷ்யாவின் தென்மேற்கு நகரமான வோரோனேஜில் பயணிகள் பஸ் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை நடந்தது என்று அந்த நாட்டு ஊடகமான ‘TASS’ தெரிவித்துள்ளது.

வெடிப்புச் சம்பவம் நடந்தபோது பஸ்ஸில் 30க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர். இதுவரை வெடிப்புச் சம்பவத்துக்கான சரியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

சமூகவலைத் தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில், வெடிப்புச் சம்பவம் நடந்தபோது பஸ்ஸின் வெளிப்புறங்கள் கிழிந்து உள்ளிருந்த பொருள்கள் சிதறிப் பறப்பதைக் காண முடிகின்றது.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவர், சம்பவம் நடந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இன்னொரு பெண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று உள்ளூர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

அந்த நாட்டின் பெரும் குற்றங்களை விசாரிக்கும் புலனாய்வுக் குழுவின் வோரோனேஜ் நகரக் கிளை இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பஸ்ஸை பராமரிப்பதில் ஏற்பட்ட கவனக் குறைவே இந்த வெடிப்புச் சம்பவத்துக்குக் காரணம் என்று ஆரம்ப விசாரணைகளின் பின்னர் அந்தக் குழு கூறியிருக்கிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...

26 5
செய்திகள்உலகம்

சுவிட்சர்லாந்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் பலி: 5 பேர் படுகாயம்!

சுவிட்சர்லாந்தின் பிரிபொங் (Fribourg) மாகாணத்தில் உள்ள கெர்சர் (Kerzers) நகரில் நேற்று (10) மாலை இடம்பெற்ற...

25 5
செய்திகள்உலகம்

வாஷிங்டன் நேஷனல் மாலில் சர்ச்சையை ஏற்படுத்திய டிரம்ப் – எப்ஸ்டீன் சிலை!

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள நேஷனல் மாலில் (National Mall), முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்...