11 7 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய்.., நெஞ்சம் நிறைந்த வாழ்த்து தெரிவித்த சீமான்

Share

மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய்.., நெஞ்சம் நிறைந்த வாழ்த்து தெரிவித்த சீமான்

10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விருது வழங்கி வரும் நிலையில் விஜய்க்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கப்பட்ட மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

அதேபோல இந்த ஆண்டும் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

அந்தவகையில் இன்று , மாணவர்களுக்கு நடிகர் விஜய் பொன்னாடை போர்த்தி விருதுகள் வழங்கி வருகிறார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை!

ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது;

‘பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை – பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ – மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

முடிவுக்கு வந்தது விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு
இந்தியா

முடிவுக்கு வந்தது விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு.

விவாகரத்து வழக்கு தமிழக முதலமைச்சர் விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக...