உலகம்செய்திகள்

பணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது: ஹமாஸ் கடும் எச்சரிக்கை

Share

பணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது: ஹமாஸ் கடும் எச்சரிக்கை

பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாவிட்டால் பணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது என ஹமாஸ் படைப்பிரிவுகளின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், பேச்சுவார்த்தைகளுக்கு மாற்று எதுவும் இல்லை. இஸ்ரேல், தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அது பணயக்கைதிகளின் மரணத்திற்கு வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார்.

ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன், சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதை தொடர்ந்து, ஹமாசை அடியோடு ஒழிப்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது.

இந்த போர் 2 மாதங்களை கடந்து நீண்டு வருகிறது.

சர்வதேச நாடுகளின் முயற்சியால் காசாவில் 7 நாட்கள் போர் நிறுத்தப்பட்ட நிலையில், அதன் பின்னர் காசா மீதான போரை இஸ்ரேல் மீண்டும் ஆரம்பித்தது.

மேலும், தெற்கு காசாவை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் மிகவும் ஆக்ரோஷமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், காசாவில் உள்ள போராளிக் குழுவை ஒழிக்க நினைக்கும் இஸ்ரேலின் நோக்கம் தோல்வி அடையும் என்று ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக, படைப்பிரிவுகளின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா கூறுகையில், “காசா போராளிக் குழுவை ஒழிப்பதற்கான இஸ்ரேலின் நோக்கம் தோல்வி அடையும். இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல் அல்லது நேரடி இராணுவ நடவடிக்கைகள் பணயக்கைதிகளை விடுவிக்காது.

பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாவிட்டால் பணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது. பேச்சுவார்த்தைகளுக்கு மாற்று எதுவும் இல்லை.

இஸ்ரேல், தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அது பணயக்கைதிகளின் மரணத்திற்கு வழிவகுக்கும்.” என்றார்.

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...