Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

Share

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய இலக்காக தாம் இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதுடன், தமக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு பதிலளிக்கும் வகையில் முன்கூட்டியே உத்தரவுகளை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மெலனியா ட்ரம்ப் மற்றும் அவரது மகன் பாரன் ட்ரம்பை குறிவைத்து ஈரானில் வெளியான காணொளியில்மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த காணொளிக்கு, “Where to Kill Melania” என்ற தலைப்பு இடப்பட்டுள்ளதுடன் , அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் நியூயோர்க் நகரில் பயணிக்கும் காட்சிகள், அவர் வழக்கமாகச் செல்லும் இடங்கள் மற்றும் ஷாப்பிங் செய்யும் ஆடம்பர கடைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், அந்தக் காணொளியில், மெலனியா ட்ரம்ப் வாங்கும் ஆடைகளில் நரம்பு நச்சுப் பொருளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம் என்ற வகையிலான குறிப்புகளும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

காணொளியின் நிறைவில், “இது ஆரம்பம் மட்டுமே. பாரன் ட்ரம்ப், எங்களுக்காக காத்திரு” என்ற எச்சரிக்கையும் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையில், மெலனியா ட்ரம்ப் மற்றும் பாரன் ட்ரம்புக்கு அமெரிக்க ரகசிய சேவை 24 மணி நேர பாதுகாப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ட்ரம்ப் குடும்பத்தின் அனைத்து முக்கிய சொத்துகள் மற்றும் வெள்ளை மாளிகை, நியூயோர்க் ட்ரம்ப் டவர், நியூ ஜெர்சியின் பெட்மின்ஸ்டர் கோல்ஃப் கிளப், புளோரிடாவின் மார்அ-லாகோ உள்ளிட்ட கடுமையான பாதுகாப்பின் கீழ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளிலும் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரை குறிவைத்து பழிவாங்கும் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...