un
செய்திகள்உலகம்

மின்னலில் உலக சாதனை – அறிவித்தது ஐ.நா!!

Share

கடந்த ஆண்டு அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும் மொத்தம் 770 கிலோமீட்டர் தூரம் இந்த மின்னல் தெரிந்ததாகவும் ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இது இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரம் வரை உள்ள தூரத்திற்கு சமமானது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2018 அக்டோபர் 31ம் தேதியன்று தெற்கு பிரேசில் பகுதியில் பதிவான ஒரு மின்னலின் தூரத்தை விட 60 கிலோமீட்டர்கள் அதிகமாக அமெரிக்க மின்னல் பதிவாகி உள்ளது.

இது இயற்கை நிகழ்வுகளின் அசாதாரண பதிவுகள் என ஐ.நா.வானிலை மற்றும் கால நிலை அதிகாரி ராண்டால் செர்வெனி தெரிவித்துள்ளார்.

மின்னலின் நீளம் மற்றும் கால அளவைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் சமீபத்திய ஆண்டுகளில் வியத்தகு முறையில் மேம்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...