சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் கொவிட் – 19 காலத்தில் பெண்களின் மறுக்கப்பட்ட கருத்து சுதந்திரம் தொடர்பிலான செயலமர்வு இன்று யாழில் இடம்பெற்றது.
விழுது நிறுவனத்தின் சிரேஷ்ட சமூக வலுவூட்டடாளர் வேந்தகுமார் ஜீவசர்மிளா தலைமையில், யாழ் திருநெல்வேலி லட்சுமி மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் அதிதிகளாக, சட்டமானி கதிர்தர்சினி பரமேஸ்வரன்,
யாழ் மாவட்ட பெண்கள் அபிவிருத்திச் செயலக உத்தியோகத்தர் உதயனி நவரட்ணம் ஆகியோர் கலந்துகொண்டு கொவிட் காலத்தில் பெண்களின் மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரம் தொடர்பில் கருத்துப் பகிர்வுகளை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#SrilankaNews