மன்னார் கடல்பகுதியில் பெண்ணின் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.
மன்னார் – பிரதான பாலத்துக்கு அண்மையிலுள்ள கோந்தைபிட்டி கடல் பகுதியிலேயே குறித்த சடலம் இன்று அதிகாலை இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த பகுதி மீனவர்கள், மீன்பிடிப்பதற்காக அப்பகுதிக்கு சென்றபோது, பெண்ணின் சடலம் மிதப்பதை அவதானித்த நிலையில், மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சடலம் இனங்காணப்படாத நிலையில், குறித்த பகுதிக்கு சென்ற மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, மன்னார் பாலப்பகுதியில் இருந்து கடந்த புதன்கிழமை மாலை பெண் ஒருவர் கடலில் குதித்த நிலையில், அவரைத் தேடும் பணி தொடர்ச்சியாக இடன்பெற்று வந்தது. இந்த நிலையில் கரை ஒதுங்கிய குறித்த சடலம் அந்த பெண்ணுடையதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment