கொரோனாத் தொற்று காரணமாக மக்களுக்கான பொதுப்போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந் நிலையை கருத்திற்கொண்டு அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபை தலைவர்களின் சம்மேளனம் பொதுப் போக்குவரத்து சேவைக்கான வழிகாட்டல் கோவையை வெளியிடவுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
மேலும் இச் சம்மேளனத்தின் இணைப்பாளர் நிலந்த ஏக்கநாயக்க அனைத்து பேருந்து உரிமையாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவுக்கும் அதிக பெறுமதி உடைய நிவாரணப் பொதியை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Leave a comment