வடக்கிலுள்ள தீவுகளில் மின்னுற்பத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான அனுமதியை இந்தியாவுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
வடக்கிலுள்ள நெடுந்தீவு, அனலை தீவு மற்றும் நயினாதீவில் மின்னுற்பத்தி செயற்றிட்டம் இந்தியாவின் அதானி நிறுவனத்திடம் கையளிப்பதற்கு அமைச்சரவையில் ஆராயப்பட்டதா என வினவப்பட்டது.
வடக்கிலுள்ள நெடுந்தீவு, அனலை தீவு மற்றும் நயினாதீவில் மின்னுற்பத்தி செயற்றிட்டத்தை ஆரம்பிக்க சீன நிறுவனம் திட்டமிட்டிருந்தாலும் அவை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஆனால் இதை தவிர வேறு எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை என இதன்போது தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment