நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் மாலையுடன் கூடிய சீரற்ற வானிலையால் நின் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது என
மின்சக்தி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் தென் மாகாணத்தின் சில பகுதிகள், மத்திய, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் மின் பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின் துண்டிக்கப்பட்ட பகுதிகளில், நிலைமையை சீரமைக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் மின் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் – என்றார்.
#SriLankaNews
Leave a comment