மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு ஏன் அஞ்சுகின்றது, தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயார். தோல்வி பயத்தால்தான் தேர்தலை அரசு இழுத்தடிக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
” மாகாணசபைத் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம். எமது பக்கத்தில் தவறு இடம்பெற்றதுதான். அது சரிசெய்யப்பட வேண்டும்.
அதற்கான ஆதரவை நாம் வழங்குவோம். எனவே, எமது தவறை மட்டும் சுட்டிக்காட்டிக்கொண்டு தேர்தலை இழுத்தடிக்க வேண்டாம். இரு வருடங்கள் தவறை மட்டும்தான் கூறிக்கொண்டிருக்கின்றீர்கள்.
அதேபோல உள்ளாட்சிமன்றத் தேர்தலையும் இரு வருடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது.”- என்றார்.
#SrilankaNews
Leave a comment