தமிழீழ வைப்பகத்தில் இருந்த பணம் எங்கே? : அரசாங்கமா, இராணுவமா எடுத்தது?

Jeyanthiran

சிங்கள மக்கள் நாட்டை விட்டு ஓடுகிறார்கள். ஆனால் நீங்கள் வடக்கில் காணிகளை சுவீகரிப்பதற்கு நடவடிக்கையினை எடுக்கிறீர்கள் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சின் தலைவர் அ.ஜெயந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (04) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

காணியை அளந்து சீனாவிற்கு விற்கப்போகிறீர்களா அல்லது சிங்கள மக்களைக் குடியேற்றப் போகிறீர்களா?

எங்களுடைய மக்களுக்கே காணியின்றித் தவிக்கிறார்கள்.

யுத்தகாலத்தில் தமிழீழ வைப்பகத்தில் இருந்த பணம் எங்கு போனது, அரசாங்கம் எடுத்ததா? அந்தப் பணத்தை அல்லது, இராணுவத்தினர் அந்தப் பணத்தை எடுத்தனரா எனவும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

#SrilankaNews

Exit mobile version