அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
மேற்படி, விவகாரம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மையத்தில் வினாத்தாள் பொதிகள் திறக்கப்பட்டிருந்தபோதிலும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் எந்த வினாத்தாள்களும் கசிந்ததாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
ஏற்கனவே இச்சம்பவம் குறித்து பரீட்சைகள் திணைக்களமும், காவல்துறையினரும் விசாரணைகளினை முன்னெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும், பரீட்சை பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

