pcr
செய்திகள்இலங்கை

காரைநகரில் திருமண கொண்டாட்டம் – ‘PHI’ மீது தாக்குதல்

Share

காரைநகரில் திருமண கொண்டாட்டம் – ‘PHI’ மீது தாக்குதல்

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது அதிகளவானோருடன் நடைபெற்ற திருமண நிகழ்வு தொடர்பில் நடவடிக்கை எடுக்கச் சென்றபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் காரைநகரில் நூற்றுக்கும் மேற்மேற்பட்டவர்களுடன் நடைபெற்ற திருமண நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்களை சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தியதோடு அவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ள சென்ற சிலர், பி,சி.ஆர். உபகரணங்களை வீசி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டமையை தொடர்ந்து பொலிஸார் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரை கைதுசெய்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...