தமிழ் மக்களை கைவிடோம்! – ஸ்டாலின் உறுதி!

ஸ்டாலின் - மலையக மக்கள் உட்பட இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காக தமிழக அரசு என்றும் குரல் கொடுக்கும் என தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்

மலையக மக்கள் உட்பட இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காக தமிழக அரசு என்றும் குரல் கொடுக்கும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் இந்திய வம்சாவளி மக்கள் செரிந்து வாழும் மலையகத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் பரஸ்பர உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதன் அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் மலையகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள பல்கலைக்கழக அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

 

Exit mobile version