‘பாகிஸ்தான் அணி வீரர்களுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சிறப்பான வாய்ப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை எமது அணி இழந்துள்ளது’
இவ்வாறு நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் Tom Latham தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் பாகிஸ்தானில் இடம்பெறவிருந்த கிரிக்கெட் போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டமை கவலையளிக்கிறது – எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகிஸ்தானில் இடம்பெறவிருந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது கருத்து வெளியாகி உள்ளது.
Leave a comment