sukash scaled
செய்திகள்இலங்கை

முதலமைச்சர் கதிரைக்கு நாம் ஆசைப்படவில்லை! – த.தே.ம.மு

Share

முதலமைச்சர் கதிரைக்கு நாம் ஆசைப்படவில்லை என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காண்டீபன் மற்றும் சுகாஸ் ஆகியோர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற 13வது திருத்தத்திற்கு எதிரான வாகன ஊர்தி பிரசாரத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் கோமாளிகளின் 13 ஆவது திருத்த நாடக நிகழ்ச்சி நிரலில், மக்களே நீங்கள் ஏமாற வேண்டாம். தமிழ் மக்களின் ஆணையை பெற்றவர்கள் என்று கூறும் சிலர் இன்று 13ஐ கையிலே எடுத்து ஜனநாயகத்தை புதைத்து கொண்டு இருக்கின்றனர்.

அவர்களுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டும். இது முன்னணியின் போராட்டம் அல்ல. தமிழ் மக்களின் போராட்டம்.நாம் முதலமைச்சர் கதிரைக்கு ஆசைப்படவில்லை. மக்களோடு மக்களாக நிற்க தான் நாம் விரும்புகின்றோம்.

2013 ஆம் ஆண்டு தொடக்கம் முதலமைச்சர் கதிரையை தேய்த்து, ஒன்றுமே செய்யாத விக்னேஸ்வரன், மக்கள் விருப்பப்பட்டால் மீண்டும் வருவேன் என கூறிக்கொண்டு இருக்கின்றார். நாடாளுமன்றில் அவரால் ஒன்றும் பேச முடியவில்லை. ஏனென்றால் அங்கே சிங்கள மக்கள் அதிகம் உள்ளனர். அதனால் அவர் பேச மாட்டார்.

முதல் பொங்கலுக்கு தீர்வு வரும் என சம்பந்தன் ஐயா கூறிக்கொண்டிருந்தார். இப்போது சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூறுகின்றனர். இவர்களின் பம்பல் கதைகளுக்கு பதில் சொல்வதற்கு நேரமில்லை. நாம் கொள்கை உடையவர்கள். இவர்களின் கேள்விகளுக்கு பின்னர் பதில் கூறுகின்றோம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...