அமைச்சரின் இழிவான செயலை கண்டிக்கின்றோம்! – எதிர்க்கட்சித் தலைவர்
அநுராதபுரம் சிறைச்சாலையில் நடைபெற்றுள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இழிவான மற்றும் சட்டவிரோதமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குறித்த இராஜாங்க அமைச்சர் கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற நிலையில், தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய குற்றசாட்டு தொடர்பாகவே எதிர்க்கட்சித் தலைவர் இவ் விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையின் அராஜக நிலைக்கு கேவலமான இந்த சட்டவிரோதமான செயல் நல்ல எடுத்துக்காட்டாகும்.
நாட்டில் வாழும் அனைத்து பிரஜைகளின் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திடம் உள்ளது என்று தெரிவித்த அவர், உடனடியாக குறித்த இராஜாங்க அமைச்சரை பதவியிலிருந்து நீக்குமாறும் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளார்.
Leave a comment