20211214 141742 scaled
செய்திகள்அரசியல்இலங்கை

வாழும் சாட்சிகள் நாமே – உறவுகள் ஆதங்கம்!!!

Share

வாழும் சாட்சியங்களாகிய நாம் உயிருடன் இருக்கும்போதே எமது சாட்சிகள் உதாசீனப்படுத்தப்பட்டு வருகின்றன என வடகிழக்கைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இதனை தெரிவித்தனர்

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

இன்று 1754 நாளாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் எம்முடன் இணைந்து போராடிய 108 உறவுகளை இழந்துவிட்டோம். இந்த 108 பேரும் தமது உறவுகளின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சாட்சிகளாகும்.

நாம் கூட நோய்வாய்ப்பட்டு தமது வாழ் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம். வாழும் சாட்சியங்களாகிய நாம் உயிருடன் இருக்கும்போதே எமது சாட்சிகள் உதாசீனப்படுத்தப்பட்டு வருகின்றன.

எத்தனையோ ஆணைக்குழுக்களிடம் எமது சாட்சிகளை அக்கறையுடன் பதிவு செய்யச் சென்றோம்.

அங்கு நாம் கண்டது அவர்கள் நாம் கூறியவற்றை பதிவு செய்யாது ஆடு வேண்டுமா கோழி வேண்டுமா? என்ற கேள்விகளைக் கேட்டு எம் தேடல்களையும் எம் உறவுகள் மீது நாம் கொண்டுள்ள அன்பையும் கொச்சைப்படுத்தினர்.

இதை விட நாம் எமது கண்ணீர்க் கதைகளை நெஞ்சடைக்க கூறியவற்றை தாலாட்டாக எடுத்து அவர்கள் நித்திரை கொண்டது கூட ஊடகங்களில் வெளிவந்தது.

இப்படியான கசப்பான அனுபவங்களாலும் இலங்கை அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் எமக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா என வெளிப்படையாகவே செயல்பட்டதாலும் சர்வதேசத்திடம் நீதி கேட்டு போராடி வருகின்றோம்.

கைக்குழந்தைகளுடனும் சிறார்களுடனும் குடும்பமாக சரணடைந்தவர்களில் 20 க்கும் மேற்பட்ட சிறார்களின் நிலையை அறிய ஆணைக்குழுக்களுக்கு சென்று சாட்சியங்கள் பதிவு செய்தும் பதில் ஏதுமில்லை.

ஐநாவின் 30இன் கீழ்1 தீர்மானத்திற்கமைய உருவாக்கப்பட்டதாக கூறப்படும் “காணாமல் போனோர் அலுவலகம்” கூட எமது நோக்கத்தை நிறைவேற்றவில்லை.

அதன் இயலாமையை ஆரம்பத்திலிருந்து கூறி அதை நிராகரித்த போதும் ஏற்றுக்கொள்ளாத சர்வதேசம் தற்போது உண்மையை விளங்கிக் கொண்டிருக்கும்.

எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை சர்வதேசம் புரிய தொடங்கியிருக்கும் இந்நிலையில் அரசாங்கம் ஜெனிவாவுக்கு அனுப்புவதற்கு சாட்சியங்களைத் திரட்டும் சாக்கில் சோடிக்கப்பட்ட தகவல்களை அனுப்புவதற்காய் ஒரு நாடு ஒரு சட்டம் எனும் பெயரில்  ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

எமது பிரதேசத்தில் உள்ள பாதிக்கப்படாதவர்களாக கூட்டி வந்தால் நாம் கண்டுபிடித்து விடுவோம் என்பதற்காக இந்த ஏற்பாடு, எமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வேலைக்கு ஆட்களை திரட்டிக் கொடுத்தது மன்னாரிலுள்ள ஒரு நிறுவனம்.

தமிழர் பாதிக்கப்பட்டவர்களுக்கென வெளிநாடுகளில் பணம் பெற்று ஏப்பமிடும் நிறுவனங்கள் அரசுக்கு துணை போய் மேலும் மேலும் தமது சட்டைப் பைகளை நிரப்புவதில் குறியாகவுள்ளார்கள்.

இதை மக்களாகிய நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பச்சைத் துரோகச் செயலுக்கு உடந்தையாக இருப்பவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்து நம் சமூகத்தை துப்பரவு செய்யுங்கள்.மேலும் சர்வதேச நாடுகளுக்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை அதன் தாக்கத்தை மறைப்பதற்கும் குறைப்பதற்குமான முயற்சியே இது என்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...