ஜப்பான் கடற்படையின் பாரிய போர்க்கப்பல்கள் இரண்டு இன்று நாட்டை வந்தடையவுள்ளன.
முரசாமே மற்றும் காகா (Murasame, Kaga) ஆகிய இரண்டு போர்க்ககப்பல்களே இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுபிக் வலயத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் இருதரப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதையடுத்து குறித்த போர்க்கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment