தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இந்தியாவின் தமிழகத்தில் வரும் 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் வரும் 25ஆம் திகதி தொடக்கம் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதெனவும் அறிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிநின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு அடுத்தக்கட்டமாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாறவும் சாத்தியங்கள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சில வேளைகளில் இலங்கையின் வடபகுதியை தாக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
#india
Leave a comment