பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலி புதிய சாதனையொன்றைப் படைத்தார்.
இந்தியாவும் பாகிஸ்தான் அணிகள் நேற்று இடம்பெற்ற போட்டியில் மோதின.
இந்தியா, பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்த இப் போட்டியில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் விராட் கோலி 49 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள்,
ஒரு ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக, 57 ஓட்டங்களைப் பெற்றார்.
20-20 உலக கிண்ண போட்டியில் விராட் கோலி பெற்றுக்கொண்ட 10-வது அரைசதம் இதுவாகும்.
இதன் மூலம் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார்.
இதுவரை 20 ஓவர் உலக கிண்ண வரலாற்றில் மேற்கிந்த வீரர் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக 9 அரைசதங்களை அடித்திருந்தமையே, அதிகூடிய அரைச்சத சாதனையாக இருந்தது.
இதனை விராட் கோலி நேற்று முறியடித்து, புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
#sports
Leave a comment