கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் நாளொன்றுக்கு இரண்டு லீட்டருக்கும் அதிகமான நீரை பருக வேண்டும் என கொழும்பு மருத்துவபீட பேராசிரியரும் விசேட வைத்தியருமான ரணில் ஜயவர்த்தன கூறியுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
தொற்றுக்கு உள்ளானவர்களின் உடலில் இருந்து அதிகளவான நீர் வெளியேறுவதனால் உடலில் நீரிழப்பு (dehydration) ஏற்படும். இதனை தவிர்க்க அதிகளவான நீரை பருக வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Leave a comment