வடமேல் மாகாண சபைக்கான ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளமை தவறாகும்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” வடமேல் மாகாண ஆளுநராக செயற்பட்ட ராஜா கொல்லுரே உயிரிழந்தார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அவரே பொருத்தமானவர்.
எனவே, வசந்த கரன்னாகொடவின் நியமனம் ஏற்புடையது அல்ல. இவ்வாறுதான் சிற்சில இடங்களில் அரசு தவறிழைக்கின்றது. அந்த தவறுகளை திருத்திக்கொண்டு பயணிக்க வேண்டும்.” – என்றார்.
#SrilankaNews
Leave a comment