MediaFile 1 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: பகிடிவதையே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு!

Share

வவுனியாப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 23 வயதுடைய மாணவர் ஒருவர் கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த அந்த மாணவரின் மரணத்திற்குப் பகிடிவதையே (Ragging) காரணமாக இருக்கலாம் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே அவர் உயிரிழந்ததாகப் பூவரசங்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவர் உயிரிழந்தபோது, அவரது உடலில் கணிசமான அளவு மதுபானச் செறிவு (Alcohol Content) இருந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் திடீர் மரணத்திற்குப் பகிடிவதையே காரணம் என உறவினர்கள் உறுதியாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

உயிரிழந்த மாணவரின் சகோதரி நடத்திய விசாரணையில், கடந்த 31ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர்களின் விருந்து ஒன்றில் சிரேஷ்ட மாணவர்கள் தனது சகோதரருக்குப் பலவந்தமாக மதுபானம் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது சகோதரனுக்கு வேறு எந்த நோயும் இருந்திருக்கவில்லை என்றும், பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பகிடிவதை குறித்து அவர் பல தடவைகள் குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து வவுனியா ஆதார வைத்தியசாலையுடன் தொடர்புகொண்டு வினவியபோது, அங்குள்ள வைத்தியர் ஊடகங்களுக்குத் தகவல் வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூவரசங்குளம் காவல்துறையினர் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...