தீர்வு கிடைக்கும் வரை தொழிலுக்கு செல்லப்போவதில்லை! – வடமராட்சி மீனவர்கள் தொழில் புறக்கணிப்பில்!

20220131 134506

வடமராட்சி மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லாது புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் தமது போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து மீனவர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழக மீனவர்களின் அத்துமீறலால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. அதனை கண்டித்து மீனவர்கள் இன்று சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஆதரவுடன் வீதியை மறித்து பந்தல்களை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை முதல் , தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் கடற்தொழிலுக்கு செல்லப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

அதேவேளை ஏனைய பிரதேச மீனவர்களும் தமது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தொழில் புறக்கணிப்பில் ஈடுபடுமாறு வடமராட்சி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version