எதிர்வரும் ஒக்ரோபர் மாத இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அதன்படி 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கை மாவட்ட ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த 3.7 மில்லியன் தடுப்பூசி பெறவேண்டியுள்ளது எனவும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு ஒக்ரோபர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment