வவுனியா பிரதேச செயலகத்துக்குள் கொரோனாத் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மாத்திரமே நுழைய முடியும் என வவுனியா பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வவுனியா பிரதேச செயலகத்துக்குள் சேவைகளைப் பெற வருகை தருவோர் தடுப்பூசி அட்டை, தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை தம்வசம் வைத்திருப்பதுடன் குறைந்தது ஒரு தடுப்பூசியையாவது பெற்றிருத்தல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு தடுப்பூசிகளை பெறாது அட்டை இன்றி வருகை தருவோருக்கு நுழைவாயிலில் வைத்தே சேவை வழங்கப்படும் என வவுனியா பிரதேச செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் தடுப்பூசி அட்டை பரிசோதனை முறை அமுல்படுத்தப்படாத நிலையில் சுகாதார அமைச்சு இந்த செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த இதுவரை தீர்மானிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment