நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 16 மாவட்டங்களில் 78 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று தெரிவித்துள்ளது.
வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஐவர் காயமடைந்துள்ளனர் எனவும் மேற்படி மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அடுத்த 48 மணிநேரத்துக்கு இதே காலநிலை நீடிக்கும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோரப்பட்டுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment