தனியார் பேருந்துகளில், பேருந்து நடத்துனர் இன்றி பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் ஜனவரி முதல் இம்முறையானது நடைமுறைக்கு வரலாம் என கூறப்படுகிறது.
நாட்டில் தற்போது பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது.
இதனால் பேருந்துகளில் கிடைக்கும் பணத்தில் நடத்துனர், மற்றும் சாரதி என இருவருக்கும் ஊதியத்தினை வழங்குவது மிகவும் சிரமமாக இருப்பதால், இம்முறையினை நடைமுறைப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது.
இதனை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதனால் முற்கொடுப்பனவு அட்டைகளை பயன்படுத்தி, பேருந்துக் கட்டணங்களை செலுத்தி, சாரதிகள் இல்லாது பேருந்துகளை இயக்குவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன் இதுகுறித்த கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
#SrilankaNews