வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்கு அஸ்ட்ராஜெனகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய இரு தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டன.
குறித்த ஆய்வு அசர்பைஜான் நாட்டில் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் ஆதரவுடன் நடாத்தப்பட்டது.
இதற்காக 100 தன்னார்வ தொண்டர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
கடந்த பெப்ரவரி மாதம் இந்த ஆய்வு ஆரம்பிக்கப்பட்டது.
முதலில், அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியும், 29 நாட்கள் கழித்து, ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
இவ் ஆய்வில் முதலில் பங்கேற்ற 20 தன்னார்வ தொண்டர்களிடம் இருந்து ஆய்வு முடிவுகள் சேகரிக்கப்பட்டன.
ஆய்வின் 57-வது நாளில், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 4 மடங்கு அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 85 சதவீதம் பேருக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருந்தது.
இதே போன்ற ஆய்வுகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலும் நடாத்தப்பட்டு வருகின்றது.
அஸ்ட்ராஜெனகா மற்றும் பைஸர் ஆகிய இரு தடுப்பூசிகளை பயன்படுத்தி ஏற்கனவே இங்கிலாந்து நாட்டின் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.