நாளை முதலாம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் இரு வாரங்களுக்கு ரயில் போக்குவரத்து சேவை இடம்பெறமாட்டாது என அரசு அறிவித்துள்ளது.
இதனை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நாளை காலை 4 மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படவுள்ளது.
ஊரடங்கு நீக்கப்பட்டாலும் இரு வாரங்களுக்கு ரயில் சேவைகள் முன்னெக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அத்தியாவசிய அரச சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து பொதுச் சேவையை வழமை போன்று செயற்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளார்.
Leave a comment