Accident 02
செய்திகள்இலங்கை

இன்று காலை நடந்த சோக சம்பவம்!-

Share

கிளிநொச்சி ஏ-9 வீதியின் பாடசாலை பக்கம் மஞ்சள் கடவையில் வீதியை கடந்த போது ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ-9 வீதியின் மேற்குப் பகுதியிலிருந்து பாடசாலை பக்கம் மஞ்சள் கடவையில் வீதியை கடந்த போதே இவ்விபத்து சம்பவம் இன்று ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் கல்வி கற்ற மாணவிகள் மூவர் உயர்தரம் கல்விக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்காக பாடசாலைக்கு வருகை தந்த போது இந்த துன்பியல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Accident 03

வீதியை கடக்க முற்பட்ட போது ஏ-9 வீதியில் பயணித்த பட்டா ரக வாகனம் மாணவிகள் கடந்து செல்வதற்காக நிறுத்தியது.

இதன் பின் வந்த மின்சார சபை ஒப்பந்தகாரருடைய ஹன்ரர் ரக வாகனமும் நிறுத்தியிருந்த போது, பின்னால் வந்த இலங்கை போக்கு வரத்து சபையின் பேருந்து ஹன்ரர் ரக வாகனத்தை மோதியது.

ஹன்ரர் வாகனம் பட்டாவுடன் மோதி குறித்த வாகனங்கள் இரண்டும் மாணவிகளுடன் மோதி இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலயே திருவாசகம் மதுசாளினி (வயது 17 ) என்ற மாணவி இறந்ததுடன் மற்றொரு மாணவி காயமடைந்துள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை துவிச்சக்கர வண்டியில் நாளாந்தம் ஊற்றுப்புலத்திலிருந்து கிளிநொச்சி விறகு வெட்டி விற்பனை செய்யும் தொழிலாளி மிகவும் வறுமைக்குட்பட்டவர்.

இந்நிலையில் தனது மகளை உயர்தரத்திற்கு கற்பித்து அனுப்பிய நிலையில் முதல் நாளே இப் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...