எதிர்வரும் 17 ஆம் திகதி கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளரை கிளிநொச்சி பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவுக்கு (TID) சமூகமளிக்குமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் விசாரணைகளுக்காக கொழும்பு 4ம் மாடிக்கும், கிளிநொச்சியில் அமைந்துள்ள பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவின் அலுவலகங்களுக்கும் அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளருக்கும் விசாரணைக்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews
Leave a comment