யாழில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!!

கணபதிப்பிள்ளை மகேசன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்று வேகம் அதிகரித்துவரும் நிலையில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளபோதிலும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது.

யாழ்ப்பாணத்திலும் அண்மைக்காலமாக அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சில கிராம சேவகர் பிரிவுகளை முடக்க வேண்டிய கட்டாயத்துக்குள் யாழ்ப்பாண மாவட்டம் தள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J/26 கிராமசேவகர் பிரிவும் , மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட J/432 மற்றும் J/433 ஆகிய இரு கிராமசேவகர் பிரிவுகளும் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன என்று மாவட்டச் செயலர் மேலும் கூறினார்.

 

 

 

Exit mobile version