கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் விபத்துக்குள்ளான மிதப்பு பாலத்தை இயக்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியா பொலிஸாரால் ஒருவரும், திருகோணமலை பொலிஸாரால் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிதக்கும்பாலம் நேற்று விபத்துக்குள்ளானதில் சிறார்கள் உட்பட அறுவர் பலியாகினர். இந்த அனர்த்தத்தையடுத்து படகை இயக்கியவர்கள் தலைமறைவாகினர்.
அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பமாகியிருந்தன. இந்நிலையிலேயே மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#SrilankaNews
1 Comment