அமெரிக்காவை அதிகம் நம்பியதாலேயே இந்த நிலை!

Volodymyr Zhelensky

அமெரிக்காவை அளவுக்கதிகம் நம்பியதாலே உக்ரைனுக்கு இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் ரஷ்ய- உக்ரைன் யுத்தத்தினால் எதிர்வரும் நாட்களில் சுற்றுலாத்துறை, தேயிலை ஏற்றுமதி என்பவற்றுக்கு பாரிய தாக்கம் ஏற்படலாமென்றும் உக்ரைன் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,அமெரிக்கா உதவும் என்ற நம்பிக்கையில் உக்ரைன் இருந்தது. ஆனால் அமெரிக்கா உதவ முன்வரவில்லை. நேட்டோவில் அங்கத்துவம் பெற உக்ரைன் மேற்கொண்ட முயற்சி ரஷ்யாவின் இருப்புக்கு அச்சுறுத்தலானது. ரஷ்யாவுடன் உடன்பாட்டுடன் செல்லாது மேலைத்தேய நாடுகளுடன் நெருக்கமாக செயற்பட முயன்றதால் இந்த நிலைமை ஏற்பட்டது.

இந்த இரு நாடுகளும் எமது நட்பு நாடுகள். ரஷ்யாவிலிருந்து எமக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அத்தோடு எமது பிரதான தேயிலை ஏற்றுமதி நாடாகவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

#World

Exit mobile version