Capture
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடக்கில் ஆபத்துள்ள நோய் நிலைமையுடையவர்களுக்கு மூன்றாவது டோஸ்!!

Share

கொவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மூன்றாவது தடவையாக கொவிட்-19 தடுப்பூசி மேலதிகமாக இவ்வாரம் முதல் வழங்கப்பட உள்ளதென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் கொரோனா தொற்று மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டத்துக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேற்குறிப்பிட்ட நோய் நிலைமையுடைய 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏற்கனவே சினோபாம் கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள் அத் தடுப்பூசியைப் பெற்ற நாளிலிருந்து ஆகக்குறைந்து ஒரு மாத இடைவெளியின் பின் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக வடமாகாணத்தில் – யாழ். மாவட்டத்தில் – யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் இத் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன.

நோய் நிலைமையால் அல்லது அதற்கு பெற்றுக்கொண்ட சிகிச்சையினால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நாட்பட்ட சிறுநீரக நோயுடையவர்கள், உறுப்பு மாற்று (உதாரணமாக சிறுநீரகம், ஈரல்,சுவாசப்பை) மற்றும் என்புமச்சை மாற்று சத்திரசிகிச்சைக்கு உட்பட்டவர்கள், புற்றுநோயுடையவர்கள் மற்றும் புற்றுநோய்க்கு தற்போது சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்கள், மண்ணீரல் தொழிற்பாடு குறைந்தவர்கள் அல்லது நோய்நிலையின் நிமித்தம் மண்ணீரல் அகற்றப்பட்டவர்கள்,வைத்தியரால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களென பரிந்துரைக்கப்பட்டவர்கள் என 20 வயதிற்கு மேற்குறிப்பிட்ட நோய்நிலைமை உடையவர்கள் மூன்றாவது தடவை மேலதிக தடுப்பூசி பெற்றுக்கொள்ள முன்னுரிமை உடையவர்கள் ஆவர்.

எனவே, மேற்குறிப்பிட்ட தேவையுடையவர்கள் ஏற்கெனவே தடுப்பூசி ஏற்றப்பட்ட அட்டை மற்றும் மருத்துவ அறிக்கையுடன் தமக்கருகிலுள்ள குறிப்பிடப்பட்ட வைத்தியசாலைகளில் இம் மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1760325390 G3C9lufWoAA88wr 1
உலகம்செய்திகள்

ஜஸ்டின் ட்ரூடோ – கேட்டி பெர்ரி காதல் வதந்தி மீண்டும் தீவிரம்: ஜப்பானியப் பிரதமரின் ‘பங்காளர்’ எனக் குறிப்பிட்ட பதிவு!

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்கப் பாடகி கேட்டி பெர்ரி இடையேயான காதல்...

images 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வழுக்கையாற்றுப் பாதுகாப்பு: WASPAR ஆய்வு முடிவுகளை நடைமுறைப்படுத்த வடக்கு ஆளுநர் உறுதி!

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம் என வலியுறுத்திய வடக்கு...

1500x900 44535787 chennai 07
உலகம்செய்திகள்

ஐரோப்பிய விதிகளை மீறிய எலான் மஸ்கின் எக்ஸ் தளத்திற்கு ரூ. 4,140 கோடி அபராதம்!

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் (X) வலைத்தளம், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய...

tamilnadu 4
இந்தியாஇலங்கைசெய்திகள்

டித்வா புயல் நிவாரணம்: தமிழக அரசு சார்பில் 950 தொன் அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைப்பு!

‘டித்வா’ புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக, தமிழக...