VideoCapture 20211102 110454
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ் தரப்புகள் ஒன்றிணைவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது – ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

Share

தமிழ் மற்றும் முஸ்லீம் தரப்புக்கள் தேர்தல் உட்பட அனைத்து விடயங்களிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் தற்போது மிக வேகமாக உணரப்பட்டு உள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தமிழ் பேசும் கட்சிகளின் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் என்னிடமும் மனோ கணேசனிடமும் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க இன்றைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது – எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாமை தொடர்பாக ஊடகங்கள் அவரிடம் கேள்வியெழுப்பின. இதற்கு பதிலளித்த அவர், ஏற்கனவே குறித்த கலந்துரையாடல் தொடர்பாக தமிழரசு கட்சியுடனும் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளோம்.

அடையாள ரீதியாக இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் அவர்கள் பங்குபற்றவில்லை என்றாலும், எதிர்வரும் காலங்களில் நாங்கள் இவ்வாறான சந்திப்புகளை முன்கொண்டு செல்வதற்கு தீர்மானித்துள்ளோம் – என தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...